• Jul 21 2025

" தக் லைஃப் " திரைப்படம் மக்களிடம் எடுபட்டதா..? வைரல் ஆகும் ரசிகர்களின் கருத்து...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் இணைந்து நடித்து இன்று வெளியான திரைப்படம் " தக் லைஃப் " இந்த படத்தில் கமல் ,சிம்பு, த்ரிஷா ,அபிராமி ,ஐஸ்வர்யா இலட்சுமி,ஜோஜு ஜார்ஜ், நாசர் எனப் பல முன்னனி நட்சந்திரங்கள் நடிப்பில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியாத இல்லையா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. 


மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடிப்பில் வெளியான இந்த படத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர் பார்ப்பு மத்தியில் வெளியானது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை தவிர ஏனைய மாநிலங்களில் வெளியானது. மேலும் ரசிகர்கள் போஸ்ட்டர்களுக்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்திருந்தனர். இந்த நிலையில் காலை 9 மணிக்கு படம் வெளியாகியுள்ளது.  

மேலும் படத்தினை பார்த்த ரசிகர்கள்  கமல் மற்றும் சிம்பு நன்றாக நடித்துள்ளதாகவும் படத்திற்கான இசையமைப்பும் நன்றாக உள்ளதாக கூறியுள்ளார்கள். மேலும் காட்சிகள் யூகிக்க கூடிய அளவிற்கு அமைந்துள்ளதாகவும். சில இடங்களில் கேள்வி கேட்கும் வகையில் இருந்தாலும் படம் பார்க்க கூடியதாக உள்ளது .


மேலும் ரசிகர்கள் கமல், சிம்பு எனப்பலரும் தங்களுக்கு கொடுக்கபட்ட கதாப்பாத்திரத்தினை நல்ல முறையில் நடித்திருப்பதாகவும் திரைப்படத்தின் கதை சொல்லுகின்ற அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை எனக் கூறினார்கள். படத்தில் நடித்திருப்பவர்களுக்கா பார்க்கலாம் என்று குறிப்பிட்டனர் . இப் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement