• Apr 28 2024

விருமன் திரைப்படத்திற்கு கிடைத்த பெரிய ஒப்பனிங் -கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் விருமன்.

மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கார்த்தி - முத்தையா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்டது.மேலும் அப்போதில் இருந்து ரசிகர்கள் விருமன் படம் குறித்த வீடியோக்களை தான் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

அத்தோடு தமிழகத்தில் மொத்தமாக இப்படம் 475 திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. எனினும் இது கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விருமன் படத்தின் ஒப்பனிங் வசூல் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை விட மூன்று அதிகமாக இருப்பதாக திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement