• May 19 2024

படவாய்ப்பு குறைந்ததால் பிக்பாஸிற்குள் நுழையும் பிரபல நடிகை-சர்ச்சை விசயங்களுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பட வாய்ப்பு குறைந்த நிலையில் பிரபல நடிகை பிக்பாஸ் இற்குள் களமிறங்கப் பேவதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்நிலையில்  வரும் அக்டோபர் 2ம் தேதி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காடுன்னு ஒன்னு இருந்தா சிங்கம், புலி, நரி, மான் என அனைத்தும் இருக்கும் என கமல் பேசிய அட்டகாச ப்ரமோ வீடியோ வெளியாகி வேறலெவலில் டிரெண்டானது. பிக் பாஸ் சீசன் 6க்கான புதிய கண் லோகோ மற்றும் போட்டி விதிமுறைகள் என பல விஷயங்களை விஜய் டிவி ஒன்றன் பின் ஒன்றாக தெரிவித்து வருகிறது.


டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் அமலா பால் தயாரித்து நடித்த கடாவர் திரைப்படம் வெளியானது. எனினும் அதனை புரமோட் செய்யும் விதமாக நடிகை அமலா பால் கடந்த சீசன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனின் புதிய ரியாலிட்டி ஷோவான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் அமலா பால் போட்டியாளராக பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்தோடு பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஓவியா மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வாரென பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே இல்லை. இந்நிலையில், அமலா பால் கலந்து கொள்ளப் போவதாக சொல்வது வெறும் வதந்தி தான் என்கிற பேச்சுக்களும் கிளம்பி உள்ளன


இயக்குநர் பாலாஜிமோகன் இயக்கத்தில் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சித்தார்த் உடன் நடிகை அமலா பால் இணைந்து நடித்திருந்தார். அத்தோடு மீண்டும் அவர் இயக்கும் புதிய படத்தில் நடிகை அமலா பால் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


ஆனால், ஒரு வேளை நடிகை அமலா பால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சர்ச்சைக்கும் டிஆர்பிக்கும் பஞ்சமே இருக்காது என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அத்தோடு இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் நடந்த விவாகரத்து, ஆடை படத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் பறிபோன சர்ச்சை, இரண்டாம் திருமண சர்ச்சை என ஏகப்பட்ட விஷயங்களை அமலா பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மனம் திறந்து பேசுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement