• May 19 2024

நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பூக்கொந்து அளித்த புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 80களில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்குபவர் தான் கேப்டன் விஜயகாந்த். நடிகராக மட்டும்லாது அரசியல்வாதியாகவும் பல ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்தார்.

இவர் இன்றைய தினம் தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் நடிகர் கார்த்தி நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார்.அத்தோடு அவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடி இருந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, கேப்டன் விஜயகாந்துடன் அவர்களின் நட்சத்திரங்கள் எடுத்துகொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜய் கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பூக்கொந்து அளித்த புகைப்படத்தை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது விஜயகாந்தின் முன்னைய பிறந்த நாளில் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement