தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘பராசக்தி’. சமூக அரசியல் பின்னணியுடன், கருத்து மிக்க கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
ஆனால், இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் நீண்ட நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. பல்வேறு விவாதங்கள், சர்ச்சைகள் மற்றும் கருத்து மோதல்களுக்குப் பிறகு, ஒருவழியாக இன்று சென்சார் அதிகாரிகள் ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவும் ரசிகர்களும் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

படத்திற்கு சான்றிதழ் கிடைத்தாலும், அதனுடன் சேர்ந்து வந்துள்ள கட் மற்றும் மியூட் உத்தரவுகள் தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்சார் குழு, படத்தின் பல இடங்களில் வசனங்களை மியூட் செய்யவும், சில காட்சிகளை கட் செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அரசியல், சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் சில வசனங்கள், உணர்ச்சிபூர்வமான டயலாக் என மொத்தமாக 27 கட் மற்றும் மியூட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த விஷயம் என்னவென்றால், “தீ பரவட்டும்” என்ற வசனத்திற்கே சென்சார் குழு மியூட் போட உத்தரவிட்டிருப்பது தான்.
அந்த வார்த்தை பல காட்சிகளில், பல உணர்ச்சி தருணங்களில், கதையின் இயக்க சக்தியாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வசனத்திற்கே மியூட் போட சொல்லியிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!