தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’ குறித்து திரையுலகில் கடந்த சில மாதங்களாக பரபரப்பான செய்திகள் வெளியாகி வந்தன.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாலும், படம் வெளிவருவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக நீதிமன்றத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

‘வா வாத்தியார்’ படத்தின் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான ஞானவேல் ராஜா, திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் ரூ.21 கோடியை கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, படத்தை உரிமையாளர் பணத்தை திருப்பி வழங்கும் வரை வெளிவிடக் கூடாது என்று அர்ஜுன்லால் சுந்தர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து, உயர் நீதிமன்றம் படத்தினை வெளியீட தடை விதித்திருந்தது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் படத்தை வெளியிடுவதற்கான தடையை நீக்கியதாக தற்பொழுது கூறியுள்ளது.
அதே நேரத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது ரூ. 3 கோடியே 75 லட்சம் செலுத்த தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் கூறியதன்படி, போதுமான கால அவகாசம் முன்னதாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் பணத்தை முழுமையாக செலுத்த தயாராக இருப்பதால், படம் வெளியீட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, ‘வா வாத்தியார்’ படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
Listen News!