• May 04 2024

அருண் விஜய்க்கு ஏற்பட்ட பலத்த காயம்... விரைவில் நலம் பெறப் பிரார்த்தித்து வரும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். 'முறை மாப்பிள்ளை' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் ரசிகர்களைக் கவரும் விதத்தில் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். 


அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'யானை', 'சினம்' போன்ற படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து விரைவில் இவர் நடித்துள்ள 'பார்டர்' என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது.

அதுமட்டுமல்லாது மிகவும் பரபரப்பான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அருண் விஜய் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை எமி ஜாக்சன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 


இந்த படத்தின் உடைய படப்பிடிப்பானது சமீபத்தில் லண்டனில் தொடங்கி இருந்தது. இதுகுறித்த ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இப்படத்தினுடைய அறிவிப்பை அறிவித்திருந்தனர் படக்குழுவினர். இந்த படத்தின் உடைய முதல் கட்ட படப்பிடிப்பானது நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.


இந்நிலையில் இந்த படத்திற்கான சண்டை பயிற்சியில் அருண் விஜய் ஈடுபட்டபோது, அவரது முழங்காலில் பலத்த காயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த காயத்துடன் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


மேலும் அவர் குறிப்பிடுகையில் விரைவில் 100% சதவீதம் குணமடைந்து மீண்டும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதனைப் பார்த்த அருண் விஜய்யின் ரசிகர்கள் அவர் விரைவில் நலமடைய வேண்டும் எனக் கூறி பிரார்த்திப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement