இந்திய சினிமா உலகையே ஆச்சரியப்பட வைத்த ‘காந்தாரா’ படம் இப்போது ஒரு பிராண்டாக மாறியுள்ளது. அதன் வரிசையில் தற்பொழுது உருவாகியுள்ள 'காந்தாரா – சாப்டர் 1' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது, அதுவும் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களால் வெளியிடப்பட்டிருப்பது தமிழ் பட ரசிகர்களுக்கு சிறப்பு செய்தியாக அமைந்துள்ளது.
பிரம்மாண்டத் தோற்றம், ஆழமான கதை, கலாசாரத் தெளிவு, நம்பிக்கை கலந்த "காந்தாரா" ரசிகர்கள் மனதில் அழியாத இடம் பிடித்தது. இப்போது, அதன் வடிவில் உருவாகியுள்ள 'காந்தாரா: சாப்டர் 1' இன்னும் ஆழமான கதையுடன் திரைக்கு வர தயாராகி வருகிறது.
‘காந்தாரா’ பாகம் இந்திய முழுக்க பேசப்பட்டது என்றாலும், தமிழ் ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தை உருவாக்கியது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 'சாப்டர் 1' தமிழிலும் வெளியாகும் என்பதை உறுதிசெய்யும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
‘காந்தாரா’ படத்தின் முடிவில் ஏற்பட்ட கேள்விகளுக்கு பதிலாகவே 'சாப்டர் 1' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கதையின் பின்னணி, வரலாறு, அந்த மாய உலகத்தின் தோற்றம் ஆகியவை விரிவாகப் பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!