• May 15 2025

நயன்தாராவை வில்லனாக மிரட்டவரும் அருண் விஜய்....- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகமான 'மூக்குத்தி அம்மன் 2' விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.C இயக்கவுள்ளதுடன்  இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சமூக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களும் படக்குழுவினரின் எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல் பாகமான 'மூக்குத்தி அம்மன்' ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகம் மேலும் விறுவிறுப்பாக உருவாகும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.


இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் படத்தில் 'இட்லி கடை' படத்தில் வில்லனாக நடிக்கும் அருண் விஜயே இப்பொழுது 'மூக்குத்தி அம்மன் 2' படத்திலும் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் நடிப்பு திறனை கருத்தில் கொண்டு, இந்த கதாபாத்திரம் சிறப்பாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கும் அருண்விஜய் இதற்கு அதிகளவு சம்பளத்தை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் முதல் பாகத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் யார் நடிக்க உள்ளார்கள், யார் யார் புதியதாக இணைகின்றனர் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement