• Apr 15 2026

ஆர்யாவின் புதிய காதல் படத்தில் சாயிஷா இணைகிறாரா.? வெளியான அதகள அப்டேட்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆர்யா, கடந்த சில ஆண்டுகளில் தனது திறமை மற்றும் தேர்ச்சியான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். தற்போது, அவர் தனது திரையுலக பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்த 40வது படத்தின் பூஜையில் கலந்துள்ளார். 


இந்த விழா சமீபத்தில் நடைபெற்றதுடன், அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பூஜை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா தனது மனைவியுடன் கலந்துகொண்டு, படத்தின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.

நிகழ்ச்சியில் ஆர்யாவின் மனைவி சாயிஷா, தீபார்த்தனை செய்த காட்சிகள் ரசிகர்களின் பார்வையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆர்யா, இந்த 40வது படத்தை காதல் படமாக உருவாக்க திட்டமிட்டதாகவும் அறிவித்துள்ளார். படத்தின் பூஜை நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு ஆர்யாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி, படத்தின் ஆரம்பத்தின் மகத்தான தருணமாகவும், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement