பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய 5 சீசன்களை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குவாராம்.
பிக் பாஸ் ஓடிடியை அடுத்து 6வது சீசனை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் சிம்பு இல்லை கமல் தான் தொகுத்து வழங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்த புது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும் போட்டியாளர்கள் தேர்வும் இப்போது தொடங்கி இருக்கிறது.
முந்தைய சீசன்களை போல இந்த சீசனில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் போட்டியாளராக யாரெல்லாம் வருவார்கள் என ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்
அத்தோடு பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் அவர் ரியாலிட்டி ஷோவில் 40 நாட்கள் கலந்துகொள்கிறேன் என கூறி இருக்கிறார். அவர் மறைமுகமாக பிக் பாஸ் ஷோவை தான் குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது.
https://twitter.com/MSimath/status/1553398099481337857?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1553398099481337857%7Ctwgr%5Ed3b5916186e03207b2917f6c466b8ba7fb19553d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fpolimer-news-reader-ranjith-to-enter-bigg-boss-6-1659281045பிற செய்திகள்
- ஆடையில்லா புகைப்படம்- பெண்களுக்கு நல்லது செய்திருக்கிறார் ரன்வீர் சிங் – நடிகை ராக்கி சாவந்த்
- காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய கியாரா அத்வானி…30வயதிலிலும் ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படங்கள்..!
- இரண்டு நாட்களில் குலு குலு செய்த வசூல்…முழு விபரம் வெளியானது..!
- திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்
- பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க-வைரலாகும் புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!