• Apr 28 2024

எக்ஸ்பிரஷன் குயின்..ராஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாள் இன்று..! குவியும் வாழ்த்துக்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா மந்தனா கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் பிறந்தார். இவர் 2016-ம் ஆண்டு கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் நாயகனான ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்தார். இவர்கள் திருமணத்திற்கு 2017-ல் நிச்சியதார்தம் நடந்தது. ஆனால் 2018ல் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.இதனை தொடர்ந்து இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்து வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர். இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. இவரை ரசிகர்கள் பலரும் நேஷனல் க்ரஷ் என்று கூறி வருகின்றனர். அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து புகழ்பெற்றார்.சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 'சீதா ராமம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மற்றும் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' படத்தில் நடித்துள்ளார்,

சமீபத்தில் ராஷ்மிகா அளித்த பேட்டி ஒன்றில் "எனது சிறு வயதில் தமிழகத்தில் குஷ்பூ-விற்கு திரைப்பட ரசிகர்கள் கோயில் ஒன்றினை கட்டி உள்ளனர் என்று எனது தந்தை கூறியுள்ளார். நானும் அத்தகைய ரசிகர்கள் பெறுவேன் " என கூறியுள்ளார். இந்தியாவின் பிரபல பத்திரிகை ஒன்று தென்னிந்திய சினிமாவில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களின் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள 30 சினிமா பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது.அந்த பட்டியலில் தென்னிந்திய சினிமாவில் பல நடிகர்களை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடித்தார் ராஷ்மிகா மந்தனா.பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் போஸ்டிக்கு கிடைக்கும் லைக்குகள், கமெண்ட்கள், அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, வீடியோக்களின் வியூஸ், பதிவுகளின் ரீச் ஆகியவற்றை கணக்கிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

இப்படி அனைத்திலும் டாப் இடத்தில் தான் இருப்பார் ராஷ்மிகா. ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா எக்ஸ்பிரஷன் குயின் என கொண்டாடப்படுகிறார். இப்படி ஒரு புறம் இளைஞர்களின் க்ரஷாக இருந்து வந்தாலும் நாளுக்கு நாள் அவரை வெறுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போனது. அப்போது ராஷ்மிகாவை ட்ரோல் செய்து பல வீடியோக்களும் வெளியானது.

இதனால் மிகுந்த வேதனை அடைந்த ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அதில், "என்ன காரணம் என்று தெரியவில்லை. மக்கள் நான் எது செய்தாலும் வெறுக்கிறார்கள். நான் ஒர்க் அவுட் செய்தால் ஆண் போல இருப்பதாக ட்ரோல் செய்கிறார்கள்.

அப்படி செய்யாவிடில் எடை கூடி குண்டாக இருப்பதாக கூறுகிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள் பேசினால் கிரிஞ்ச் என்கிறார்கள். நான் மூச்சு விட்டாலும் பிரச்சனை மூச்சு விடவில்லை என்றாலும் பிரச்சனை. நான் என்னதான் செய்வது என தெரியவில்லை. சில சமயங்களில் நான் சினிமாவை விட்டு விலகிவிட வேண்டுமா என கூட தோன்றியுள்ளது. " என உருக்கமாக தெரிவித்து இருந்தார்.சினிமாவில் உச்சத்திற்கு செல்லும் போது அதில் பல தடைகள் வருவது வழக்கம் தான். அதை நாம் எப்படி கையால்கிறோம் என்பது தான் முக்கியம். ஒருகட்டத்தில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த ராஷ்மிகா தற்போது அதனை கடந்து வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளார்.

அவரின் பயணம் வெற்றி பெற அவரின் பிறந்தநாளான இன்று வாழ்த்துவோம். இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடும் ராஷ்மிகா மந்தனாவிற்கு அவரது ரசிகர்கள், திரைபிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement