• May 12 2024

கோபியின் கையை உதறி விட்டு பாக்கியாவின் கையைப் பிடித்த இனியா- இது தான் சந்தர்ப்பம் என கோபியை ஏத்தி விட்ட ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண“ருக்கம் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிட்டலில் கோபி இனியாவின் கையைப் பிடிச்சு வா வீட்டுக்கு போகலாம் என்று அழைக்க இனியா கோபியின் கையை உதறி விட்டிட்டு பாக்கியாவின் கையைப் பிடிக்கின்றார்.மேலும் இனியா நான் அம்மாவோட போறேன் என சொல்ல கோபி உனக்கு அப்பா தானே உயிர், என்கூட வந்துடு நான் உன்ன நல்லா பாத்துக்குறேன் என சொல்ல ,டாடி நான் இனிமேல் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.


அதன் பிறகு இனியாவை டிஸ்சார்ஜ் செய்து வெளியே அழைத்து வர திரும்பவும் கோபி தன்னுடன் வந்துடு என அழைக்க பாய் டாடி என சொல்லி விட்டு நகர கோபி கண்ணீருடன் நிற்கிறார். ராதிகா அவங்க எல்லாரும் ஒண்ணு, நீங்கதான் தனி ஆள், இனியா உங்களை எப்படி தூக்கி போட்டு போறா பாருங்க என சொல்லி ஏத்தி விடுகிறார்.

அடுத்து இனியா வீட்டுக்கு வர அவளை ஆர்த்தி எடுத்து அழைத்துச் சென்று ஆளாளுக்கு அறிவுரை சொல்கின்றனர். அடுத்து எல்லோரும் இனியாவுடன் வீட்டில் சந்தோஷமாக இருக்க மறுபக்கம் கோபி வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.இந்த நேரம் ராதிகா போய் ஆறுதல்படுத்த கோபி இனியா இனிமேல் வரமாட்டா நீ கொஞ்சம் அவளை சொஃப்டா சொல்லியிருக்கலாம். நானும் ஒழுங்காக கவனிச்சிருக்கலாம் என்று கூறுகின்றார்.


இப்படி இவர்கள் பேசிட்டு இருக்கும் போது ராமமூர்த்தி வருகின்றார். அவரைப் பார்த்ததும் கோபி இனியா மற்றும் அவரது துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்ப கோபி நீங்களாவது என் கூட இருங்க நீங்க இங்க இருந்தா இனியா இங்க வருவா என சொல்ல இனியாவே இந்த வீட்ல இல்ல அவளுக்காக தான் நான் இங்கே இருந்தேன். இனி நான் எதுக்கு இருக்கணும் என சொல்லி கிளம்பி செல்கிறார்.


பின்பு  பாக்கியா இனியா, எழில், அமிர்தா மற்றும் ஜெனி என நால்வரும் இருந்து காட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் போது பாக்கியா அனைவருக்கும் சாப்பாடு ஏட்டி விடுகின்றார்.இனியாவும் செம குஷியில் இருக்கின்றார். மறுபக்கம் கோபி ஒயின் ஷாப்பில் ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை நினைத்து சரக்கு அடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement