• May 04 2024

எல்லாம் விரைவில் சரியாகிவிடும்'- ஹாஸ்பிட்டலில் இருக்கின்றாரா தொகுப்பாளினி ஜாக்குலின்- என்னாச்சு இவருக்கு?

stella / 1 year ago

Advertisement

Listen News!

வரும் அக்டோபர் 9ம் திகதி விஜய் டிவியில் ஆரம்பமாகவுள்ள ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இதன் 6 வது சீசன் தான் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கப் போவதாக ஏற்கனவே ப்ரோமோ எல்லாம் வெளியாகியிருந்தது.

இதனால் விஜய் டிவியில் சில சீரியல்கள் முடிவுக்கு வருகின்றது. அதே போல சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. மேலும் இதில் போட்டியாளராகப் பங்குபற்றும் போட்டியாளர்களின் விபரமும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


அந்த வகையில் இந்த சீசனில் நடிகை ஜாக்குலினும் பங்குபற்றுவார் என்று கூறப்பட்டது.இந்நிலையில் தற்போது ஜாக்குலின் ஹாஸ்பிடல் பெட்டில் இருப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். 'எல்லாம் விரைவில் சரியாகிவிடும்' எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் 'ஜாக்குலினுக்கு என்னாச்சு' என அதிர்ச்சி உடன் கேட்டு வருகிறார்கள்.மேலும் ஜாக்குலின் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement