• May 05 2024

நடிகர் சங்கத்திலிருந்து திடீரென நீக்கப்பட்ட நடிகர் பாக்கியராஜ்- பரபரப்பில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது.இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் இரண்டரை ஆண்டுகளாக நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. இதனையடுத்து கடந்த மார்ச் 20ஆம் தேதி நடிகர் சங்கத்தின் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியேற்று கொண்டனர்.


இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்தின் சார்பில் கே.பாக்யராஜிக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. அதில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகம் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துகளை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருவதாகவும், இதனால் கே.பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்க உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி வருவதாக அந்த Show Case நோட்டீஸில் நடிகர் சங்கம் இருவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தது.

 மேலும் ஏன் உங்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் சார்பாக பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க விதி 13-ன் படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவே அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லக் கூடாது என விதி உள்ளதால் நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் மற்றும் உதயா உள்ளிட்ட இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட் வாட்டராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement