• May 05 2024

அனைவரும் எப்போதும் கவனமாக இருங்கள்- ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவலைக் கூறிய குஷ்பு

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1980களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை அடுத்து வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். இப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.


இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நண்பர்களுக்கு வணக்கம், எனக்கு கொஞ்சம் டெடாக்சிஃபிகேஷன் தேவை என்பதால், ரேடாரில் இருந்து வெளியேறுகிறேன்.

 விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள், பாசிடிவ்வாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் குஷ்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement