• Mar 08 2026

இப்பவும் என் பொண்ணு கூட பேசிக்கிட்டே இருக்கேன்... – விஜய் ஆண்டனி உருக்கமான பேட்டி.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குநராக பல்வேறு துறைகளில் தன்னை நிரூபித்துள்ள விஜய் ஆண்டனி, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய தனிப்பட்ட இழப்பைப் பற்றிக் கடந்த காலங்களில் மிகவும் அமைதியாகவே இருந்தார். ஆனால் சமீபத்தில் வழங்கிய நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்ட சில வார்த்தைகள், பலரது மனங்களை உலுக்கியதுடன், ஒரு தந்தையின் உணர்வை வெளிப்படுத்தியதாக இருந்தது.


அதன்போது விஜய் ஆண்டனி, “என் மகள் இழப்பு, இழப்பாகவே எனக்குத் தெரியல. ஏன்னா இப்பவும் என் பொண்ணு கூட பேசிக்கிட்டு தான் இருக்கேன். என் கூட தான் இருக்கா… எங்க போனாலும் என் கூடவே தான் கூட்டிட்டு போறேன். அதாவது, கூடவே கூட்டிட்டு போறேன், வாறன் என்று நினைச்சிட்டு இருக்கேன். ரொம்ப ஜோசிச்சால் தான் நான் சொல்லுறதோட அர்த்தம் புரியும்,” என்று கூறியுள்ளார்.

இந்த வரிகள் மூலம் தந்தையின் மனநிலையை உணர முடிகிறது. சாதாரணமாக ஒரு மனிதரை இழந்த பிறகு “அவர் இல்லை” என்று மனம் ஏற்றுக்கொள்ள நேரம் எடுக்கிறது. ஆனால் விஜய் ஆண்டனி கூறுவது, அவர் தனது மகளை ‘இழந்துவிட்டேன்’ என்று நினைக்காமல், இன்னும் தன்னுடன் இருப்பதாகவே உணர்கிறார் என்பதே. இந்தக் கூற்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement