• Jan 15 2025

ஈஸ்வரி பற்றிய உண்மையை உடைத்த எழில்.. இறுதியில் பாக்கியா போட்ட கண்டிஷன்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழிலை நடு வீட்டில் வைத்து அசிங்கப்படுத்துகின்றார் ஈஸ்வரி. பாக்கியா எழிலுக்காக கதைத்த போதும் ஈஸ்வரி விடுவதாக இல்லை மீண்டும் மீண்டும் எழிலை குத்தி காட்டி பேசுகின்றார்.

அதன் பின்பு ஒரு வழியாக எழிலை ரூமுக்குள் அழைத்துச் செல்ல, அந்த நேரத்தில் இதற்கெல்லாம் காரணம் அமிர்தா தான் அவளுடைய ராசி தான். அவளுக்கு ஒழுங்கா வாழ்க்கை அமையவில்லை. அவ எப்ப இந்த வீட்டுக்குள்ள வந்தாளோ அப்ப இருந்தே ஒன்றும் நல்லதாக நடக்கவில்லை என்று அமிர்தா மீது மொத்த பழியையும் போடுகின்றார். மேலும் கணேஷ் வந்து திருப்பிக் கூப்பிட்டால் என்ன செய்வா  என கணேசையும் மீண்டும் இழுத்து பேசுகின்றார். இதனால் தானும் நிலாவும் வீட்டை விட்டு போவதாக அமிர்தா சொல்லுகிறார்.

இதனால் பொறுமை இழந்த எழில் எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். உங்களால தான் நான்  படம் பண்ண முடியாமல் போச்சு. நான் டைரக்டரை பார்க்க போன போது தான் உங்கள தேடி போலீஸ் வந்துச்சு என சொல்லவும், இப்போ மொத்த பழியையும் என் மேல் போட்டுட்டியா என மீண்டும் எழிலை திட்ட தொடங்குகிறார்.


அதுமட்டுமின்றி பெரியவர்களின் பேச்சைக் கேட்டு இருப்பது என்றால் இந்த வீட்டில் இரு. அப்படி இல்லை என்றால் இந்த வீட்டை விட்டு வெளியே போ என சொல்ல, எழிலும் நான் உண்மையாகவே போய் விடுவேன் என்று சொல்லுகின்றார். ஆனாலும் ஈஸ்வரி பிடிவாதமாக நீ வெளியே போனால் தான் தெரியும் நிலாவுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்க முடியுமா? எல்லா செலவையும் சமாளிக்க முடியுமா என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

இதனால் இவற்றையெல்லாம் பார்த்து பொறுமை இழந்த பாக்கியா நீ வீட்டை விட்டு போக எழில் என சொல்கின்றார்.  இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement