தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்புத் திறமையோடு ரசிகர்களை கவர்ந்தவர் மிர்னாலினி ரவி. டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் இணையத்தில் புகழ் பெற்ற இவர், அதனை ஒரு அரிய வாய்ப்பாக மாற்றி, திரைப்பட உலகிலும் சிறப்பான இடத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தற்போதைய அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. அழகும், ஸ்டைலும் கலந்த இந்தப் புதிய போட்டோஷூட்டினை ரசிகர்கள் பாராட்டியதுடன் சமூகவலைத்தளங்களிலும் ரெண்டாக்கி வருகின்றனர்.
ஆரம்பத்தில் டப்ஸ்மாஷ் போன்ற குறும்பட வீடியோக்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு, சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, எனிமி, கோப்ரா போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகிய இப்புகைப்படங்களில் ஸ்டைலிஷ் மற்றும் டிரெண்டிங் உடையில் மிர்னாலினி ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளார். இப்புகைப்படங்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான வரவேற்பினைப் பெற்றுள்ளது.
Listen News!