• Sep 28 2025

வரதட்சனை எப்போதுமே தவறு...! விஜய் சேதுபதியின் நேர்காணல்..! வைரலாகும் பதிவு...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. திரை உலகில் தனக்கென ஓர் தனி இடத்தை பெற்ற இவர், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும் போது கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


"தவறு பண்றவங்களுக்கு நம்ம என்னன்னு சொல்லி புரிய வைக்கணும்னா, அது அவங்க வீட்டுல இருந்தே ஆரம்பிக்கணும்," எனத் தொடங்கிய அவர், சமூகத்தில் நடக்கும் நாசமாக்கும் செயல்கள் குறித்தும், அதனை எப்படி வீட்டிலேயே எதிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும் அவர், "ஒரு உறவில் பிரச்சனை வந்துவிட்டால், அது அந்த இருவருக்குள் தீர்வாக வேண்டியது. மற்றவர்கள் அதில் தலையிடக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தங்களுடைய வாழ்க்கையை தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது," என கூறினார்.


வரதட்சனை, தாய் மாமனார் அழுத்தம் போன்ற சமூகப் பிரச்சனைகளும் தவறான செயல்களும் தண்டனையிற்குரியவையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விஜய் சேதுபதியின் இந்த திறந்த உரையாடல், பலரும் பின்பற்ற வேண்டிய கருத்தாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. சமூக நீதி, பெண்களின் உரிமைகள் மற்றும் மனிதநேயம் குறித்த இவரது பார்வை, ரசிகர்கள் பொது மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement