• May 07 2024

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ரீட்- என்ன தெரியுமா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.அத்தோடு  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும், வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  தீபாவளி பண்டிகையில் விஜய்யின் திரைப்படம் வெளியாவது வழக்கமான ஒன்று ஆனால் இந்தாண்டு விஜய்யின் எந்தஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.

அத்தோடு  தீபாவளியில் விஜய்யின் திரைப்படங்கள் குறித்த அப்டேட் வரும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆம், வாரிசு படத்தின் முதல் சிங்கிள் அன்று வெளியாகுமென ஏற்கனவே பரவிய தகவல் தான். அதுமட்டுமின்றி அன்று தளபதி 67 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   


Advertisement

Advertisement

Advertisement