• Sep 19 2024

லாரன்ஸிற்குள் ஆவி புகுத்தி இருக்காங்க... தியேட்டர் பக்கம் போய்டாதீங்க... 'சந்திரமுகி-2' படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாவது பாகம் (Chandramukhi 2) நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.


இப்படமானது பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து வருகின்ற நேரத்தில், பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.

அந்தவகையில் சந்திரமுகி-2 படம் குறித்துப் பயில்வான் கூறுகையில்  "ரஜினி நடித்த சந்திரமுகி கதையை தான் அப்படியே மாற்றி, அந்த சாயல் தெரியக்கூடாது என்பதற்காக ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்னு சொல்லி 'சந்திரமுகி-2' பண்ணி வச்சிருக்காங்க, சொல்லிக் கொள்ளுமளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை" என்றார். 


அத்தோடு "சந்திரமுகி-2வில் பிரச்சினையே ஹீரோதான். லாரன்ஸிடமிருந்து இயக்குநர் நிறைய பாடுபட்டு ரஜினியின் சாயலை எடுத்துவிட்டு லாரன்ஸிற்குள் பாலகிருஷ்ணாவின் ஆவியை புகுத்தியிருக்கின்றார். அறிமுக சண்டை காட்சியில் கூட பாலகிருஷ்ணாவைப் போல் தான் பண்ணியிருக்கார்,  சண்டைக் காட்சியைப் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்தவர்கள் கைத்தட்டி சிரித்துவிட்டார்கள். மொத்தத்தில் கலாய்க்கிறதற்குக் கூட இந்தப் படம் தகுதி இல்லை" எனவும் கூறியுள்ளார்.


மேலும் "லாரன்ஸின் நடிப்பு வேட்டையன், செங்கோட்டையன் என 2வேடங்களிலும் படம் பார்ப்பவர்களை குழப்பியுள்ளது. அதுமட்டுமல்லாது சந்திரமுகியாக ஜோதிகாவிற்குப் பதில் கங்கனா ரணாவத் என்ற பாட்டியை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள்" எனவும் கூறிக் கழுவி ஊற்றியுள்ளார்.

அத்தோடு "பின்னணி இசை, பாடல் எதுவுமே நன்றாக இலை, இந்தப் படத்தில் அடிக்கடி தெற்கு திசை பக்கம் போயிடாதீங்கனு சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ நாங்க என்ன சொல்றோம்னாஇந்தப் படம் ஓடும் தியேட்டர் இருக்கும் திசை பக்கமே நீங்க போயிடாதீங்க" எனவும் கூறியிருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன்.  

Advertisement

Advertisement