• Sep 27 2023

என்னது அதிகாலை 5 மணிக்கே ஜெயிலர் படம் போடுறாங்களா?..அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், சிவகார்த்திகேயனின் மாவீரன் என சமீப காலமாக எந்தவொரு பெரிய படங்களுக்கும் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

முதல் காட்சியே காலை 9 மணிக்குத் தான் ஆரம்பமாகி வந்த சூழலில் ஜெயிலர் படம் 5 மணிக்கு வெளியாவதாக தியேட்டர் டிக்கெட் புக்கிங் ஸ்க்ரீன் ஷாட்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் நேற்று நள்ளிரவு ஆரம்பமான நிலையில், அனல் பறந்து கொண்டு இருக்கிறது. காலை காட்சிகள் எல்லாம் நிரம்பி விட்ட நிலையில், முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் பல முக்கிய திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாகி விட்டன.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் புக்கிங் தொடங்கிய வேகத்திலேயே நிரம்பி வருவதாக ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயிலர் படத்துக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

ஆனால், முதல் நாள் காலை 9 மணிக்குத் தான் ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் ஆரம்பமாகும் என்றும் மறுநாள் முதல் 5 மணி காட்சிகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


பிவிஆர் டிக்கெட் புக்கிங் இன்னும் ஓபன் ஆகவில்லை. புக் மை ஷோ டிக்கெட் நிலவரத்தின் படி ஜெயிலர் படத்துக்கு தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் காட்சிகள் ஆரம்பமாகின்றன.

2 லட்சத்து 20 ஆயிரம் லைக்குகளுடன் புக் மை ஷோவில் டிக்கெட்டுகளுக்கான இன்ட்ரெஸ்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாயாஜால் தியேட்டரில் மட்டும் முதல் நாளில் 72 ஷோக்கள் ஜெயிலர் படத்துக்கு போடப்படுகிறது. அதில், கிட்டத்தட்ட 25 ஷோக்கள் இப்பவே ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது. இதுதான் சூப்பர்ஸ்டார் பவர் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement