• Oct 09 2024

மகன்களுடன் இன்ஸ்டாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா... முதல் ஆளாக பாலோ செய்தது யார் தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடித்தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்தார்கள்.


திருமணத்தைத் தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் தமது குழந்தைகளை சந்தோசமாக வளர்த்து வருகின்றார்கள்.

குடும்ப வாழ்க்கையைத் தாண்டி இவர்கள் இருவரும் தமது சினிமாப் பயணத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். விக்கியைப் பொறுத்தவரையில் சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.


இந்நிலையில் தற்போது நயன்தாரா முதன்முறையாக இன்ஸ்டா பக்கத்தில் இணைந்துள்ளார். அதுவும் குறிப்பாக தனது மகன்களுடன் இருக்கும் வீடியோவைப் பதிவிட்டு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாவில் இணைந்த நயன்தாராவை முதல் ஆளாக அவரது கணவர் விக்கி பாலோ செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் நயன்தாராவை பாலோ செய்து வருகின்றனர்.

Advertisement