தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்காத சஞ்சய், நேரடியாக, இயக்குநராகும் முடிவுக்கு வந்துவிட்டார். லைகா தலைவர் சுபாஸ்கரன் முன்னிலையில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திட்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சஞ்சய்யின் முதல் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில், தனக்குப் பிடித்த ஹீரோ யார் என்பது குறித்து ஜேசன் சஞ்சய் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. வீட்டிலேயே மிகப் பெரிய மாஸ் ஹீரோவான அப்பா விஜய் இருக்கும் போது, சஞ்சய் வேறு யாரை சொல்லிவிடப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவரோ "அப்பா விஜய்யை தான் பிடிக்கும்... ஆனால், அவருக்குப் பின்னால் எனக்கு பிடித்த ஹீரோ அஜித் அங்கிள் தான். அஜித் அங்கிளின் கெத்து தான் மை ஃபேவரைட்" எனக் கூறியுள்ளாராம்.
அதேபோல், விஜய், அஜித் இருவருக்கும் பிறகு விஜய் சேதுபதி தான் தனக்கு பிடித்த ஹீரோ எனவும் சஞ்சய் சொன்னதாக தெரிகிறது. இதனால் தான் தனது முதல் படத்தின் ஹீரோவாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க ஜேசன் சஞ்சய் ஆர்வத்துடன் உள்ளாராம். அதனை புரிந்துகொண்ட லைகா நிறுவனம் விஜய் சேதுபதியிடம் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!