• May 13 2024

இரட்டை வேடங்களில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ள சூர்யா- அடடே ஷுட்டிங் எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகிய சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட வெற்றி பெற்றிருக்கின்றன. இதனைத் தொடந்து பாலாவுடன் இணைந்து வணங்கான் என்னும் படத்தில் நடித்து வந்தார்.

அப்படம் பாதியில் இடை நிறுத்தப்பட்டதை அடுத்து சிறுத்தை சிவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தைத் தொடர்ந்த வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.


வாடிவாசல் படத்தின் ஷுட்டிங் வரும் டிசம்பரில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. படம் 2024ம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இந்தப் படத்தில் நடிப்பதற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகள் இரண்டை வாங்கி பயிற்சி பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement