• May 19 2024

நடிகர் விஜய்யிடம் அமலாபால் கேட்க விரும்பும் கேள்வி என்ன தெரியுமா?- இவ்வளவு ஓபனாக கேட்டிருக்கிறாங்களே?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியான நீலத்தாமரை என்னும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் அமலாபால். இதனைத் தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி என்னும் படத்தில் ஹரிஸிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து மைனா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மைனா திரைப்படம் தான் இவரை சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது இதனை அடுத்து தெய்வ திருமகள் ,வேட்டை ,காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனை ,தலைவா ,வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


இது தவிர தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகின்றார். சில காலம் தனிப்பட்ட பிரச்சினையால் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக கடாவர் என்னும் திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் இவர் அண்மையில் கலந்து கொண்ட பேட்டியில் நடிகர் விஜய்யிடம் நீங்க கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் விஜய் சேர் நீங்க சூப்பர் ஸ்டார் அளவுக்கு வளர்ந்திருக்கிறீங்க நிறைய ரசிகர்களைக் கொண்டிருக்கிறீங்க அதெல்லாம் எப்படி? நீங்க வாழ்க்கையில் இதை சாதிக்க வேண்டும் என்று தான் முயற்சி செய்து வருகின்றீர்களா? எனக் கேட்பேன் என்று கூறியுள்ளார்

Advertisement

Advertisement