• Jan 15 2025

மாரி செல்வராஜை பார்த்து பொறாமைப்படும் மணிரத்தினம்... என்ன சொன்னார் தெரியுமா ?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ். தற்போது மாமன்னன் படத்திற்கு அடுத்ததாக வாழை என்கின்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அது மட்டுமின்றி இந்த படம் ஹாட் ஸ்டாரில் நேரடியாகவே வெளியாக உள்ளது.


இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.  தற்போது இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவிலேயே காணப்படுகின்றது. இந்த நிலையில், வாழை திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் இயக்குனர் மணிரத்தினம் வாழை திரைப்படம் தொடர்பாக இவ்வாறு கதைத்துள்ளார். 


மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குனர், எல்லாவிதமான விடயங்களையும் மக்களுக்கு விளங்குற வகையில் சொல்ல கூடிய ஒரு நபர் மாரி. அது இந்த வாழை படத்துலயும் இருக்கு. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு தெரிஞ்சி அந்த விலேஜ்ல இருந்தவங்கள எப்படி இவ்வளோ சிறப்பா நடிக்க வச்சீங்கன்னு தெரியல எனக்கு பொறாமையா இருக்கு எல்லாருமே சிறப்பா நடிச்சி இருக்காங்க.இந்த படம் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement