• Apr 26 2024

ஜிபி முத்துவிடம் தன் ஆசையை சொன்ன மைனா...அப்பிடி என்ன தான் சொன்னார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் பைனல் நடைபெறும் என தெரிவதால் யார் வெற்றி பெறுவார் என்ற கணிப்பையும் பலர் முன் வைத்து வருகின்றார்கள்.

அத்தோடு பல விறுவிறுப்பான கட்டத்திற்கு மத்தியில், தற்போது 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர். முன்னதாக கதிரவனும் க்கு முன்னேறி இருந்த நிலையில், 3 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு கதிரவன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.



இதனைத் தொடர்ந்து ஐந்து போட்டியாளர்கள் இருக்கும் சூழலில், மீண்டும் பணப் பெட்டி ஒன்றும் வந்துள்ளது.எனினும் இதனை யாராவது எடுத்து விட்டு வெளியேறுவார்களா என்ற விறுவிறுப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டம் வரை விறுவிறுப்பாக செல்வதால் தொடர்ந்து பிக் பாஸ் குறித்து நிறைய பதிவுகளும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இவ்வாறுஇருக்கையில், ஜிபி முத்து மற்றும் மைனா நந்தினி ஆகியோர் இந்த சீசன் போட்டியாளர்கள் குறித்து நிறைய கருத்துக்களை பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் மைனா நந்தினி, "எனக்கெல்லாம் ஷிவினுக்கு டைட்டில் கிடைக்கணும்னு ஆசை" எனக் கூறியதும் "எல்லாருமே கஷ்டப்பட்டு தான் வந்துருக்கீங்க. யார் ஜெயிச்சாலும் ஓகே தான்" என ஜிபி முத்து தெரிவித்தார்.



எனினும் இதனைத் தொடர்ந்து, ஷிவின் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டு பேசும் மைனா நந்தினி, "நான் ஷிவின்க்கு வந்து டைட்டில் கிடைக்கணும்ன்னு நினைக்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா. அவ இந்த இடத்துல ரொம்ப நார்மலா இருக்கா, புரியுதா உங்களுக்கு?. இந்த இடத்தில் அந்த வித்தியாசமே இல்லாம ரொம்ப நார்மலா என்னால முடியும் அப்படின்னு இருக்கா" என கூறுகிறார்.

இறுதியில் பேசும் ஜிபி முத்து, "இது ஒரு பெரிய விஷயம். அத்தோடு இந்த மாதிரி வந்து என்னால முடியும் நானும் இருக்கேன்னு இருக்கா" என ஷிவினுக்கு ஆதரவாக ஜிபி முத்து சொல்கின்றார்.இதனைத் தொடர்ந்து இருவரும் ஷிவின் குறித்தும் நிறைய கருத்துக்களை பேசிக் கொண்டும் இருக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement