• May 04 2024

கனடாவில் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு விடுக்கப்பட்டிருந்த மிரட்டல்... அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் 70 ஆண்டுகால முயற்சியாக இருந்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் இன்றைய தினம் வெளியானது. அந்தவகையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் லைகா நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் கூட்டுத்தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் பான் இந்தியா படமாக இன்று உலகம் முழுவதும் வெளியானது. 


அதாவது சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளிலும் படம் இன்று வெளியாகி இருக்கின்றது. இவற்றில் கடும் மிரட்டலை மீறித்தான் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடான கனடாவில் படம் வெளியானது. 


அதாவது "பொன்னியின் செல்வனை கனடாவில் திரையிடக்கூடாது, மீறித் திரையிட்டால் கடும் விளைவு ஏற்படும்" என பகிரங்கமாக தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் "படத்தை வெளியிட்டால் திரைகளை கிழிப்போம், தியேட்டருக்குள் விஷவாயுவை செலுத்துவோம்" என மிரட்டலில் கூறப்பட்டிருந்ததையும் மீறி படம் ஆனது வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.


அந்தவகையில் கனடாவின் ஹாமில்டன், கிச்சனர் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 படத்தை வெளியிட தயாராகி வந்த நிலையில், பலருக்கும் திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் வழியாக வந்திருந்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டினை முன்னிட்டு திரையரங்குகளில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக இம்மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு இருந்தது.


இந்த மிரட்டல் காரணமாக திட்டமிட்டப்படி கனடா மற்றும் லண்டனில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

ஆனால் அனைத்து மிரட்டல்களையும் மீறி பொன்னியின் செல்வன் கனடாவில் வெளியாகி உள்ளது. அத்தோடு பொதுமக்களும் பலத்த ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் படமானது வெற்றிகரமாக ஓடுகிறது என கனடா விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement