• May 01 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியின் பிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி .இதனைத் தொடர்ந்து புத்தம் புது காலை விடியாதா?, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களிலும் இன்று பிரமாண்டமாக வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருந்தார்.

இப்படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் ,மலையாளம் மற்றும் தெலுங்கு என பன்மொழிகளிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் பற்றி வெளியாகியுள்ளது.


அதாவது 32 வயதான இவர் வயதிற்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாத அழகுடன் இருக்க உடற்பயிற்சி தான் காரணமாம்.ஆரோக்கியமான உணவு மற்றும் தீவிர உடற்பயிற்சியை வழக்கமாகக் கொண்டுள்ளார்.ஐஸ்வர்யாவின் ஒர்க் அவுட் முறையானது. ஜாலியான நடை அல்லது ட்ரெட்மில்லில் ஓடுவது உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகளை கொண்டுள்ளது.


 ஐஸ்வர்ய லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் தனது பயிற்சியாளர் உடன் கடுமையான பயிற்சி செய்வதை காணலாம். சில பிளாட் உடல் எடை பயிற்சிகளையும் அவர் மேற்கொள்கிறார் இது முக்கிய தசைகளை உருவாக்க ஒரு சிறந்த வழியாகும்.

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் செய்ய அவர் மறுப்பதில்லை. இது அவரது உடலை சூடாகவும் குளிர்ச்சியாகவும் உதவுகிறது. காலையில் மூன்று நான்கு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தனது நாளை தொடங்குகிறார். சிறிது வேக வைத்த முட்டைகள் மற்றும் பழங்களை உட்கொள்வதன் மூலம் நடிகை ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement