• May 05 2024

நானே வருவேன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் என்ன தெரியுமா?- அப்போ இது குறும்படமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.


இந்த நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் இரண்டு மணித்தியாலங்கள் இரண்டு நிமிடம் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.




Advertisement

Advertisement

Advertisement