• Apr 27 2024

செல்வராகவன் படத்தில் செம குத்தாட்டம் போடும் மன்சூர் அலிகான்- இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுப்பார் போல தான் இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பழைய வண்ணாரப்பேட்டை,  திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் மோகன் ஜி சத்ரியன்.இதில் திரௌபதி படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனால் இவருடைய அடுத்த படங்கள் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பானது அதிகரித்தது. இந்த நிலையில் இவர் தற்பொழுது இயக்குநர் செல்வராகவனை வைத்து  பகாசூரன் என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.


இப்படத்தில் இடம்பெற்ற #SivaSivayam முதல் சிங்கிலை அவரது முதல் பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி  21 ஆம் தேதி வெளியிட்டார்.இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில், பகாசூரன் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள 2 ஆம் பாடல் #Kaathama பாடல் விரைவில் ரிலீஸாகவுள்ளதாகவும், இப்பாடலின் ஒத்திகையில் நடிகர் மன்சூர் அலிகான் ஈடுபடும் வீடியோவை  இயக்குநர் மோகன் ஜி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இது வைரலாகி வருகிறதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement