தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல நடிகர் அஜித்குமார், கார், பைக் ரேசிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது மலேசியா இடம்பெறும் கார் ரேசிங்கிலும் அஜித் குமார் கலந்து கொண்டுள்ளார்.
பல்வேறு இடங்களில் இடம்பெறும் கார் பந்தயங்களில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றார் அஜித் குமார். இதைத் தொடர்ந்து அஜித் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருவதை ஆவணப்படமாக உருவாக்க உள்ளார் ஏ.எல். விஜய். அதன்படி அடுத்த ஆண்டு அஜித்தின் ரேஸிங் பயணம் ஆவணப்படமாக நேரடியாகவே OTTயில் வெளியாகும் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில், மலேசியாவில் அஜித் குமார் தனது ரசிகர்களுக்காக செய்த செயல் அனைவரையும் அசர வைத்துள்ளது. அதாவது அஜித்தை காண்பதற்கான நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மலேசியாவில் குவிந்துள்ளனர்.

மேலும் அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக ரேஸிங் முடிந்த பிறகு தனித்தனியாக அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்து அவர்களின் ஆசை நிறைவேற்றியுள்ளார் அஜித் குமார்.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைனில் இன்று தனித்தனியாக சென்று அஜித்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். இதற்காக பல மணி நேரமாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து சகஜமாக நடந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அஜித்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!