• May 19 2024

நயன்தாரா , விக்னேஷ் சிவன் தங்கியிருக்கும் சிக்ஸ் சென்ஸஸ் விடுதியின் ஒரு நாள் வாடகை என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திரத் தம்பதியனராக விளங்கும் விளங்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தமது இரண்டாவது ஹனிமூனைக் கொண்டாட ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றுள்ளர். இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்.


இது தவிர உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.மேலும் பார்சிலோனா நகர வீதிகளில் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கைப்பிடித்து நடந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.‌


பார்சிலோனா நகரை அடுத்து வேலன்சியா நகருக்கு நயன்தாரா & விக்னேஷ் சிவன் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.மேலும் ஸ்பெயின் போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ மூலம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து உள்ளார்.

 இந்நிலையில் இவர்கள் ஐபிஜா தீவில் சுற்றுலா சென்றுள்ளனர்.‌ ஐபிஜா தீவில் உள்ள வட முனையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான  சிக்ஸ் சென்ஸஸில் தங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.


இந்த சிக்ஸ் சென்ஸஸ் விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் 45,000 ரூபாய் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement