• Jun 26 2024

லியோ படத்தின் முதல் பாதி எப்படி இருக்குத் தெரியுமா..? படத்தைப் பார்த்துவிட்டு முக்கிய பிரபலம் முன்வைத்த முதல் விமர்சனம்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

இந்த வருடம் வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. 


இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்க படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ லலித் தயாரிக்கிறார்கள். 


இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் எப்படி இருக்கின்றது என்பதனை அறிய ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். 

அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற விஜய் சேதுபதியின் மஹாராஜா திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் லியோ படத் தயாரிப்பாளர் லலித் குமார் கலந்துகொண்டார். அந்த சமயத்தில் அவரிடம் லியோ படம் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் "படத்தின் முதல் பாதியை தான் பார்த்துவிட்டதாகவும், முதல் பாதி சூப்பராக இருந்ததை பார்த்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜை போனில் பாராட்டியதாகவும்" கூறியுள்ளார்.


மேலும் "எடிட்டர் பிலோமின் ராஜ்ஜும் லியோவில் தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாகவும், கடின உழைப்பை வழங்கியிருப்பதாகவும், நிச்சயமாக லியோவை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை" எனவும் கூறி உறுதிமொழி அளித்துள்ளார்.

அத்தோடு விஜய் இன்னும் லியோ படத்தை பார்க்கவில்லை எனவும் லலித் குமார் கூறியுள்ளார். எது எவ்வாறாயினும் தயாரிப்பாளர் கூறிய இந்த விமர்சனமானது லியோ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement