• May 18 2024

'லியோ' படத்திலிருந்து விலகிய லோகேஷ்..? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்... வெளியானது உண்மைத் தகவல்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும் .


இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 1மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்ற ஒரு செய்தி சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்தது.


இதனையடுத்து உண்மை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது லோகேஷ் லியோ படத்திலிருந்து வெளியேற வாய்ப்பு இல்லை எனவும், இவை யாவுமே பொய்யான தகவல் எனவும், சிலர் லியோ படத்தின் மீது கொண்டுள்ள பொறாமையினால் தான் இப்படியான வதந்திகளை பரப்புகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக ஒரு சிலர் தங்களுடைய தனிப்பட்ட கோபத்தை பல கோடிகள் போட்டு எடுக்கப்படும் படங்களின் மீது சுமத்துவது மிகவும் தவறு எனக் கூறிப் பலரும் இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களை கண்டித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement