• May 04 2024

வெற்றி நடை போடும் 'தி லெஜண்ட்'…11 நாள் முடிவின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தாலும் வாழ்க்கையில் பல விமர்சனங்கள், கேலிப் பேச்சுக்கள் என அனைத்தயும் கடந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இருப்பவரே நடிகர் சரவணன் அருள். அதாவது இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து அதன் மூலம் பல விமர்சனங்களை பெற்றவர். அவற்றில் பெரும்பாலானவை நெகட்டிவ் விமர்சனங்களையே அவர் சந்தித்திருந்தார்.

எனினும் அதற்கு எல்லாம் கொஞ்சம் கூட சளராமல் தற்போது 'தி லெஜண்ட்' என்ற படம் மூலம் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். இப்படமானது கடந்த 28-ஆம் திகதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படமானது தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது இப்படம் ரூ. 45 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்படமானது ரிலீஸ் ஆகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் தற்போது வரை மக்கள் நல்ல வரவேற்பையே கொடுத்து வருகின்றார்கள். அத்தோடு இதுவரையும் நல்ல வசூல் வேட்டையைத்தான் படம் செய்து வருகிறது. இந்நிலையில் இப்பதினொரு நாட்கள் முடிவில் இப்படமானது ரூ. 11ல் இருந்து ரூ. 12 கோடி வரை வசூலித்திருப்பதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement