• Jun 24 2024

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவருடைய முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக குவிய தொடங்கின. தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.

நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. இவர்களது இயக்கத்தில் நடிகர் தனுஷ் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இப்படம் வரும் 22ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் விழாவிற்கு மகன்களுடன் நடிகர் தனுஷ் சென்றார். இதனையடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் தனுஷ், ''யாத்ராவும், லிங்காவும் முழுமையாக ஷோவை கைப்பற்றிவிட்டார்கள்'' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அத்தோடு இப்படத்தில் நடிக்க தனுஷிற்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4 கோடியாம்.

மேலும் கோலிவுட் படங்களில் நடிக்க 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தனுஷ், ஹாலிவுட் படத்திற்காக இவ்வளவு குறைவான தொகையை சம்பளமாக பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுமட்டுமின்றி இப்படத்தில் தனுஷுடன் நடித்த கிரிஷ் எவான்ஸுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலரும், ரியான் காஸ்லிங்கிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரும் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement