• May 04 2024

முதல் நாள் வசூலில்.. முழு உலகையுமே திரும்பிப் பார்க்க வைத்த 'அவதார் 2'.. எத்தனை மில்லியன் தெரியுமா.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. அந்தவகையில் உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.


இருப்பினும் உலக சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார், இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து நேற்றைய தினம் 'அவதார் 2' திரைப்படம் வெளியாகி இருந்தது.


மேலும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் தொழில்நுட்ப விஷயங்கள் கதையை தாண்டி அதிகம் பேசப்படும். இப்படமானது டிசம்பர் 16 ஆன இன்று தான் உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் வெளியாகியுள்ளது. 


அதாவது நேற்று டிசம்பர் 15 சில நாடுகளில் மட்டும் தான் வெளியாகியுள்ளது. அப்படி வெளியான சில நாடுகளில் மட்டுமே இப்படமானது 16 மில்லியன் டாலர் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement