• May 08 2024

படம் வெளியாகிய இத்தனை நாட்களில் லியோ திரைப்படம் பெற்ற வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது படம் தான் லியோ.கடந்த 19ஆம் தேதி மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் சில விமர்சனங்கள் கலவையாக தான் வந்துள்ளது, முதல் பாதி  சூப்பர், ஆனால் இரண்டாம் பாதி சொல்லும் அளவிற்கு இல்லை என்கின்றனர்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை படக்குழு பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்ய கடைசியில் ரத்தானது. இந்த நிலையில் தான் லியோ படக்குழு வெற்றிவிழாவை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்கள்.நிகழ்ச்சிக்காக போலீஸ் அனுமதி வாங்க சென்னை காவல் நிலையத்தில் கடிதமும் கொடுத்துள்ளார்கள்.


விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும் கூட இப்படம் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் பல இடங்களில் பிரேக் ஈவன் செய்து தனது லாப கணக்கையும் துவங்கிவிட்டது.

இந்நிலையில், வசூலை வாரிக்குவித்து வரும் லியோ 12 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement