• May 09 2024

தவறாக பரப்பிய செய்தி உண்மையானது... அந்த நல்ல விஷயம் இப்பத்தான் நடந்து இருக்கு... மகிழ்ச்சியை பகிர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

ஐந்து வருடகாலமாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஒரே நெடும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த தொடரின் முதல் பாகம் மிகவும் சுவாரஸ்யமாக நிறைவைத்து விட்டது. இதனால் ரசிகர்கள் கவலை அடைய கூடாது என பாண்டியன் ஸ்டோர்ட்ஸ் பாகம் இரண்டு ஒளிபரப்பாகியுள்ளது. பாகம் ஒன்றில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். 


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர் ஸ்டாலினும், ஹேமாவும் இந்த ரெண்டாவது சீசனிலும் நடிக்க இருக்கிறார்கள் என்கிற தகவல்கள் வெளியாகின. ஆனால், தொடரின் ப்ரோமோவில் நடிகர் ஸ்டாலின் மட்டுமே இருந்தார்.


இந்நிலையில், பலரும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹேமா சீசன்-2விலும் நடிக்கிறார் எனக் கூறி வந்த நிலையில் ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ` பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2ல் நான் இருப்பதாக தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீர்கள். இதுவரையில் எதுவும் உறுதியாகவில்லை. ஏதாவது நல்ல விஷயங்கள் நடந்தால் அதனை மகிழ்வுடன் உங்களுக்கு அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் இந்தத் தொடர் குறித்து ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். அதில், `ஆமாம்.. அதிகாரப்பூர்வமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2வில் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து ஹேமாவின் ரசிகர்கள் பலரும் சமூகவலைதள பக்கங்களில் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். நடிகர் அஜய் ரத்தினம், `கதாநாயகி' நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாலினி, ஶ்ரீலேகா ராஜேந்திரன் எனப் பல்வேறு நட்சத்திரப் பட்டாளங்கள் இந்தத் தொடரில் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement