• Apr 26 2024

வாத்தி திரைப்படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..? வெளியானது விபரம்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வரும் திரைப்படம் “வாத்தி”. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

வாத்தி திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைக்க படத்தில் சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  தற்போது வரை உலக முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 104 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படம் 100 கோடி வசூல் செய்திருந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது படம் 104 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழை போல படம் தெலுங்கிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement