• Apr 19 2024

வீரசிம்ஹா ரெட்டி படத்தைப் பார்த்த விஜய் கூறிய விஷயம்- உண்மையைச் சொன்ன வரலட்சுமி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் இடம் பெற்று வருகின்றது.

விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்பம் வெளிவந்த அதே சமயத்தில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் தான் வீரசிம்ஹா ரெட்டி.தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்படம் வெற்றியடைந்தது.


இந்நிலையில், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை வரலட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் சார் வீரசிம்ஹா ரெட்டி படம் பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.


இப்படத்தை பார்த்தபின், நடிகை வரலட்சுமிக்கு நடிகர் விஜய், படம் நன்றாக இருக்கிறது என மெசேஜ் செய்தாராம். இந்த விஷயத்தை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வரலட்சுமி பகிர்ந்துகொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement