• Sep 19 2024

இயக்குநராக அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் தமிழில் பிரபல்யமான நடிகரான தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் தற்பொழுது பிரிந்து விட்டனர்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள். விவாகரத்துக்குப் பின்னர் தமது கெரியரில் இருவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ்வரயா இயக்குநர் அவதாரம் எடுத்து மீண்டும் படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் ராகவா லாரன்ஸை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பிஸியாக பணிகளை கவனித்து வரும் ஐஸ்வர்யா ரஜினியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 20ல் இருந்து 30 கோடி வரை கூறப்படுகிறது. இது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement