• May 04 2024

பிக்பாஸ் மகேஷ்வரியின் முன்னாள் கணவரை தெரியுமா..வெளியானது புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல தொகுப்பாளர்கள் இருந்து வருகிறார்கள். அந்தவரிசையில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மகேஸ்வரி.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6இல் கலந்துகொண்டுள்ளார்.

இவர் விஜய் டிவியில் ’அசத்தப்போவது யாரு’ உள்ளிட்ட ஒருசில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார். அத்தோடு புதுக்கவிதை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் ’குயில்’, மந்திரப்புன்னகை’, ‘சென்னை 28- 2’,விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் .


 தொகுப்பாளினியான இவர் கடந்த சில வருடங்களாக நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்களை நடத்தி வந்தார், அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் நன்கு வைரலாகி வந்தன.

தொகுப்பாளினியாக இருந்து சீரியல்களில் நடித்து வந்த மகேஷ்வரியின் திருமணம் பிரிவில் தான் முடிந்தது. மேலும் ஒரு பேட்டியில் மகேஷ்வரி பேசும்போது, நான் மீடியாவில் நுழைந்த சில காலங்களிலேயே எனக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.


அப்போது அதை பற்றிய புரிதல் கூட எனக்கு இல்லை, இருவருக்கும் மன பொருத்தம் இல்லை, சில வருடங்களிலேயே பிரிஞ்சுட்டோம். அதற்கு பின்னர் எனது மகனை நான் தான் பார்த்துக்கொண்டு வருகிறேன் என பேசியுள்ளார்.

இதோ அவரது முன்னாள் கணவரின் புகைப்படம்,





Advertisement

Advertisement

Advertisement