• May 19 2024

திவ்யா உன்னியா இது... 40 வயசாகியும் இவங்க அழகு இன்னமும் அப்படியே தாங்க இருக்கு... சேலையில ஜொலிக்கிறாங்களே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை திவ்யா உன்னி. இவர் 'கண்ணன் வருவான்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் 'வேதம், சபாஷ்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கின்றார். 



இவ்வாறாக படங்களில் நடித்து வந்த திவ்யா உன்னி 2002-ஆம் ஆண்டு மருத்துவர் சுதீர் சேகரனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இவர் நடிப்பிற்கு முழுக்குப் போட்டு விட்டார். இத்தம்பதிகளுக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். 



14 ஆண்டுகள் சந்தோசமாக வாழ்க்கையை ஓட்டி சென்ற இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இப்பிரிவிற்கு காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.


திவ்யா உன்னி நடிப்பில் மட்டுமல்லாது பரதம், குச்சிப்புடி, மோகினியாட்டம் என்பவற்றின் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர். அத்தோடு தனது முழுக் கவனத்தையும் இதன் மீதே செலுத்தி வருகின்றார்.



அத்தோடு இவர் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்களினை பதிவிட்டு வருவார். அந்தவகையில் தற்போதும் சிவப்பு நிற உடையணிந்து வீடியோ ஒன்றினை பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "வயசாகியும் உங்க அழகு இன்னமும் குறையல" எனக் கூறித் தமது கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement