• Apr 15 2026

இவங்க என்ன இப்புடி சொல்லிட்டாங்க.! விஜய் ஒரு தொடை நடுங்கி..-ஜேம்ஸ் வசந்த்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் குறித்து, பிரபல இசையமைப்பாளரும் கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி பேசப்படுபவருமான ஜேம்ஸ் வசந்தன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

விஜயின் அணுகுமுறை, ரசிகர்களிடம் அவர் காட்டும் அமைதி மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


சமீபத்தில் அவர் வெளியிட்ட கருத்துகளில், நடிகர் விஜயை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “விஜய் ஒரு கோழை, வலிமை இல்லாத ஒரு துடை நடங்கி. எல்லாரையும் பேசவிட்டிட்டு வேடிக்கை பார்க்கிறது என்ன ஒரு கொடூரமான மனம். ரசிகர்கள் கொந்தளிச்சுகிட்டு இருக்காங்க, ஆனா இவர் வாயே திறக்காம இருக்காரு. படம் வரலன்னு அவரது ரசிகர்கள் போராடுறாங்க. அவங்களுக்கு அறிவுரை சொல்லவாவது வாய திறக்கணும் இல்ல?” எனத் தெரிவித்துள்ளார். 

இந்த கருத்துகள் வெளியானதும், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. மேலும் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்துகளில், “சொந்த பிரச்சனைக்கே போராடாதவன். எப்படி மக்கள் பிரச்சனைக்குப் போராடுவான்? மன உறுதியோ, தெளிவோ, வலிமையோ இல்லாதவர் விஜய்.”எனக் கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள், விஜயின் எதிர்கால அரசியல் பயணம் குறித்து மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலும், அவரது பொது நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement