• May 18 2024

பிசாசு 2 திரைப்படத்தின் டீசரைப் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவர் தான் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பிசாசு 2 என்னும் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸானது.

மேலும் வழக்கமான மிஷ்கின் ஸ்டைலில் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதைப்பார்த்த இயக்குநர் ஷங்கர் மிஷ்கினை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளாராம்.

இதனால் படக்குழு குஷியடைந்துள்ளதோடு இந்தப் படத்தின் வருகைக்கா ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகக் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement