• May 18 2024

அண்ணாத்த படத்தின் உண்மையான வசூலை வெளியிட்ட சன் டிவி -அட இவ்வளவு தானா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. அத்தோடு இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.

விஸ்வாசம் படத்திற்கு பின் சிவா இயக்கிய இப்படம் ரஜினி நடிப்பில் வெளியான நல்ல குடும்ப திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அண்ணாத்த திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றுது, இதனால் இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

இதனிடையே தற்போது சன் டிவி நெட்ஒர்க் தரப்பில் அண்ணாத்த திரைப்படத்தின் வசூல் குறித்த விவரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அதன்படி அண்ணாத்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடியை வசூல் செய்திருப்பதாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இதனால் தற்போது ரசிகர்கள் பொய்யான வசூல் விவரங்களை ட்ராக்கர்ஸ் பரப்பி வருவதாக அவர்களை விமர்சித்து வருகின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement